அவருடைய நட்சத்திரத்தைக் கவனித்தல் WATCHING HIS STAR 59-0411E சனிக்கிழமை மாலை, ஏப்ரல் 11, 1959 ஏஞ்சலஸ் டெம்பிள் (Angelus Temple), லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் அவருடைய நட்சத்திரத்தைக் கவனித்தல் (59-0411E) ஜெபத்திற்காக நாம் சற்று நேரம் நின்றுகொண்டிருப்போம். நாம் நமது தலை களைத் தாழ்த்துவோமா. 2 சர்வவல்லமையுள்ள தேவனே, எங்கள் கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து திரும்பவும் கொண்டு வந்து, வேத வாக்கியங் களின்படி மூன்றாம் நாளில் அவரை எழுப்பி, மகிமையில் உமது வலதுபாரிசத்தில் அவரை உட்காரவைத்திருக்கிறீர், நாங்கள் அறிக்கையிடு வதின்பேரில் பரிந்துபேசுவதற்காக அவர் அங்கே இருக்கிறார், அவர் துவங்கிய வேலையைத் தொடர்ந்து செய்வதற்குப் பெரிய பரிசுத்த ஆவியானவரைத் திரும்ப அனுப்பியிருக்கிறார், கர்த்தராகிய இயேசுவின் வேலையைத் தொடர்ந்து செய்யும் இந்தப் பரிசுத்த ஆவியானவர், அவர் ஒருநாள் திரும்புவார் என்பதற்கான அடையாளமாக இருக்கிறார் என்பது எப்பொழுதும் அறியப்படும்படியாகவே இப்படிச் செய்திருக்கிறீர். 3 மேலும் பிதாவே, இப்போது நாம் இந்த முடிவுகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், கர்த்தருடைய வருகை சமீபித்திருப்பதை நாம் பார்க்கிறோம், அடையாள பலகைகள் வைக்கப் பட்டுள்ளன, அவர் இன்னமும் வராதது தேவனுடைய கிருபைதான் என்று ஒவ்வொரு மணிநேரமும் எங்களைச் சிந்திக்க வைக்கிறது. ஆண்டவரே, காலத்தின் கடிகாரத்தில் அந்த இறுதி நள்ளிரவு மணி ஒலித்து, இனி அது ஒலிக்காதபடி ஆவதற்கு முன்பாக, நாங்கள் இன்னும் கடினமாகப் பிரசங்கிக்கவும், அதிகமாக ஜெபிக்கவும், அந்த கடைசி ஆத்துமாவையும் ராஜ்யத்திற்குள் கொண்டுவர முயற்சிக்கவும் வேண்டியுள்ளது போலும். அது அந்த நேரத்தை ஒலிக்கும்போது, அது முடிவில்லாத நித்தியத்தோடு கலந்துவிடும். ஆண்டவரே, ஆராதனை தொடரும்போது நாங்கள் இப்போது இந்தக் காரியங்களைக் குறித்துச் சிந்திப்போமாக. வாக்குத்தத்தத்தை அளித்த இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். 4 நீங்கள் அமரலாம். நான் சற்று சோர்வாக உணரத் தொடங்குகிறேன், அதை ஒப்புக்கொள்ள எனக்கு விருப்பமில்லை என்றாலும், அது-அதுதான் உண்மை. அநேக ஆராதனைகள் இருப்பதாலும், நாளை எனக்கு மூன்று ஆராதனைகள் இருக்கின்றன, ஒன்று டவுனியில் உள்ள அர்மேனிய மக்களுடனானது, எனது தலைப்பு: "நீ என்ன கேட்கிறாய்?", நாளை அங்கு வரவிருக்கும் அர்மேனியர்களாகிய உங்களுக்கு இது. நாளை மதியம் இங்குள்ள தேவாலயத்தில், எனது தலைப்பு இதுதான்: "தேவனைக் குறித்து நிச்சயமாயிருங்கள்." 5 மேலும் நாளை அந்த ஆராதனைக்குப் பிறகு, நாளை இரவு நடைபெறும் வழக்கமான ஜெப வரிசைக்காக நாங்கள் ஜெப அட்டைகளை வழங்கப் போகிறோம், நாளை மதியம் ஆராதனை முடிந்தவுடனேயே சிறுவர்கள் அட்டைகளை வழங்குவார்கள், ஏனெனில் ஞாயிற்றுக்கிழமை மாலை அவர்கள் இங்கு தேவாலயத்தில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள், ஆகையால் அந்த நேரத்தில் ஜெப அட்டைகளை வழங்குவது கடினமாக இருக்கும். எனவே, நாளை இரவு ஜெப வரிசையில் அழைக்கப்படுவதற்கான அட்டை யைப் பெற விரும்புகிறவர்கள் அனைவரும், நீங்கள் அட்டையைப் பெற்றுக்கொள்ளும்படி நாளை மதிய ஆராதனைக்கு வாருங்கள். 6 அதன்பிறகு, திங்கட்கிழமை இரவு ஓய்வு என்று நினைக்கிறேன், பின்னர் அடுத்த வாரம் முழுவதும், கர்த்தருக்குச் சித்தமானால், செவ்வாய்க் கிழமை இரவு விசுவாசத்தைக் குறித்து ஆதியாகமத்திலிருந்து ஒரு தொடர் தலைப்புகளில் பேச விரும்புகிறேன். நீங்கள் வந்து கேட்க வேண்டும் என்று நாங்கள் மிகவும் விரும்புகிறோம், ஏனென்றால் கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன். 7 பின்பு, அது தேவனுடைய சித்தமானால், நான் கடந்த ஏழு வருடங்களாக இதைச் செய்யவில்லை, ஆனால் தேவனுடைய சித்தமானால், அடுத்த ஞாயிறு மதியம், எனது வாழ்க்கை வரலாற்றை இங்குள்ள தேவால யத்தில் சொல்ல விரும்புகிறேன். அதை நான் இப்போது சொல்லவோ அல்லது அதைத் தொடவோ இல்லை, அது என்னை மிகவும் கலங்கச் செய்கிறது. எனது வாழ்க்கை வரலாற்றை நான் சொல்லி ஏழு வருடங்கள் ஆகிறது என்று நினைக்கிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், நான் அதற்கான பலத்தோடு உணர்ந்தால், அடுத்த ஞாயிறு மதியம், அதாவது இனி ஒரு வாரம் கழித்து வரும் ஞாயிற்றுக்கிழமை சொல்வேன். 8 இன்று காலை கிளிப்டனில் நடந்த காலை உணவின்போது, அதாவது கிறிஸ்தவ வர்த்தகர்களின் காலை உணவின்போது எங்களுக்கு ஒரு அற்புதமான நேரம் கிடைத்தது. நான் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டி ருந்தபோது, ஒரு சிறிய பெண்மணி என்னிடம் வந்தாள், அவளுடைய பெயரைச் சரியாக உச்சரிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை, அது ஒரு அர்மேனியப் பெயர், ஷெவிஸ்கின் (Sheviskin) என்று நினைக்கிறேன், அப்படிப்பட்ட ஒன்று, அவள் என்னிடம் வந்தாள், சில நாட்களுக்கு முன்பு, சுவிட்சர்லாந்திலிருந்து அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அங்கு அவளது சகோதரி சர்க்கரை வியாதி மற்றும் நிமோனியாவால் மிகவும் ஆபத்தான நிலையில் படுத்திருந்தாள், அது சில மணிநேரங்களில் மரணத்தை மட்டுமே குறிப்பதாக இருந்தது. 9 இந்தப் பெண்மணியின் கணவரும், அவரது குடும்பத்தினரும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள். சிறிது காலத்திற்கு முன்பு நாங்கள் சுவிட்சர்லாந்தில் இருந்தபோது அவர்கள் என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்கள்; பின்னர் அவர்கள் அமெரிக் காவில் என்னுடன் சேர்ந்து சந்தித்தார்கள். 10 எனினும், அவர்கள் எனக்கு அனுப்பிய செய்தியைப் பெறுவதில் நான் தவறிவிட்டேன், ஏனென்றால் நான் ஆராதனைக்கு வருவதற்கு முன்பு சிறிது நேரம் வரை யாரும் என்னைத் தொந்தரவு செய்வதில்லை. ஆனால் ஆராதனை நடந்து கொண்டிருக்கும்போதே, பரிசுத்த ஆவியானவர் சபையில் இருந்த அவள்பால் என்னைத் திருப்பினார், அவள் தன் அன்பானவருக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறாள் என்றும், பயப்பட வேண்டாம் என்றும், ஏனெனில் அவர்கள் நலமாக இருப்பார்கள் என்றும் அவளிடம் சொன்னார். இன்று அதிகாலை, கடலுக்கு மறுகரையிலிருந்து, அட்லாண்டிக் கேபிள் வழியாக இந்நாட்டிற்குத் தொலைபேசி இணைக்கப்பட்டு, அந்தப் பெண்மணி முற்றிலும் பூரண சுகத்துடனும் இயல்பு நிலையிலும் இருக்கிறாள் என்று அவளிடம் தெரிவிக்கப்பட்டது. பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதங்கள்! 11 தேவன் இருக்கிறார் என்பதையும், அவர் எல்லா இடங்களையும் மூடி, எல்லா காலங்களையும் நிரப்பி, நித்தியத்திற்குள் ஓடுகிறார் என்பதையும் உங்களால் காண முடியவில்லையா? கடலுக்கு அப்பால் உள்ள மக்களுக்காக அவர் அப்படிச் செய்வதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். தேவன் எவ்விதமாக அந்தக் காரியங்களை அவ்வளவு ஆச்சரியமாகச் செய்கிறார்! 12 எனவே இன்று, எனக்கு ஒரு சிறந்த நாளாக இருந்தது. மேலும் இப்போது, சில நிமிடங்களுக்கு முன்பு அந்தச் சிறிய சகோதரி பாடிய, அவருடைய நட்சத்திரத்தைக் கவனித்தல் என்ற பாடலை நான் பாராட்டுகிறேன், ஏனெனில் இன்றிரவு சற்றே குறுகிய இரவாக இருப்பதால், நான் அதைக் குறித்துப் பேசலாம் என்று நினைத்தேன்: அவருடைய நட்சத்திரத்தைக் கவனித்தல். 13 மேலும் அவர்கள் அதன் படங்களை எடுத்திருக்கிறார்கள் என்பது போன்று இங்கு தோன்றும் இந்த அதே வெளிச்சமாகவே, அல்லது நட்சத்திரம் ஒரு வெளிச்சமாகவே இருக்கிறது என்று நான் இதைக் குறிப்பிட விரும்புகிறேன், ஏனெனில் இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்திய அதே அக்கினி ஸ்தம்பமும், உடன்படிக்கையின் அதே தூதரும் இவரே. அவர் இன்றிரவு மீண்டும் நம் நடுவில் வந்து, கிறிஸ்துவிடம் நம்மை வழிநடத்துவார் என்று நாங்கள் நம்புகிறோம். 14 இப்போது வேதபகுதிக்காக நீங்கள் புனித மத்தேயு எழுதின சுவிசேஷம், 2-ஆம் அதிகாரத்திற்குத் திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 15 இப்போது, அவர் என்ன செய்வார் என்பது நமக்குத் தெரியாது. நாங்கள் எந்த ஜெப அட்டைகளையும் கொடுக்காமல் இப்போது மூன்று இரவுகள் ஆகிவிட்டன. மேலும் பரிசுத்த ஆவியானவர் கூட்டங்களில் உலாவி, கர்த்தராகிய இயேசுவின் ரூபத்தில் அவர் பூமியில் இருந்தபோது செய்ததைப்போலவே, புறஜாதியினரின் காலக்கட்டம் முடிவடைவதற்கு முன்பாக அதுவே கடைசி அடையாளமாக இருக்கும் என்று அவர் அளித்த வாக்குத் தத்தத்தை நிறைவேற்றும்விதமாக, மக்களை அழைத்து, அவர்களிடம் சொல்லிக் கொண்டி ருக்கிறார், அதை நினைவில் கொள்ளுங்கள், அதுவே கடைசி அடையாளமாகும். 16 அடுத்த வாரம் நாம் அதில் ஆழமாகச் செல்ல முயற்சிப்போம், அங்கு எல்லாக் காரியங்களும் இந்த மணிநேரம் வரைக்கும் சரியாக வழிநடத்தி வந்திருப்பதை நீங்கள் காண முடியும். மேலும் சபை இப்போது இவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. 17 இப்போது நான் வாசிக்க விரும்புகிறேன். ஒருவேளை நீங்கள் வேதவாக்கியங்களைத் திருப்பியிருப்பீர்கள். ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். 18 அது ஏறக்குறைய இருட்டாகிவிட்ட நேரமாக இருந்திருக்க வேண்டும், அவர்கள் மலையின் உச்சியை அடைந்திருந்தார்கள், மூலை திரும்பி வந்தபோது, நகரத்திற்கு மேற்கே இருந்த மலையான பெத்லகேமை அவர்கள் நேருக்குநேர் சந்தித்தார்கள், அவன் நின்று, சிறிய கழுதையின் கடிவாளக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு, தனது நெற்றியிலிருந்து வியர்வை யைத் துடைத்துக்கொண்டே, அந்தச் சிறிய நகரத்தின் கீழ்ப்பகுதியைப் பார்த்தான். விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன, ஏனென்றால் அநேகர் உள்ளேயும் வெளியேயும் கூட்டமாக இருந்தார்கள். நீங்கள் காண்கிறபடி, மக்கள் அனைவரும் வரிசெலுத்துவதற்காகத் தங்கள் பிறந்த ஊருக்குத் திரும்பி வர வேண்டும் என்று ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 19 ஈவிரக்கமற்ற, மிருகத்தனமான எந்தவொரு மனிதன்தான், ஒரு பெண் அந்த நிலையில் இருக்கும்போது, ஒரு சிறிய கழுதையின் முதுகில் அந்த நீண்ட பயணத்தை மேற்கொள்வதற்காக அவளை வீட்டை விட்டு வெளியேறும்படி செய்வான்! ஆனால் காலம் தொடங்குவதற்கு வெகுகாலத்திற்கு முன்பாகவே, இதெல்லாம் தேவனுடைய ஞானத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. தேவன் எப்பொழுதும் எல்லாவற்றையும் அந்தந்த நிமிடத்திற்குச் சரியாக வைத்திருக்கிறார். "அவரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது." அதை நாமும் அப்படியே சிந்திப்போம். 20 அந்த மிருகத்தனமான, கொலை பாதகனான ராஜா ஆட்சி செய்துகொண்டிருந்த அந்த நேரத்தை நாம் சிந்திக்கும்போது, மேலும் வரிசெலுத்துவதற்காக யோசேப்பும் மரியாளும் கட்டாயமாகப் பெத்லகேமுக்குச் செல்ல வேண்டியிருந்த அந்த நேரத்தில், யோசேப்பு பள்ளத்தாக்கை நோக்கிக் கீழே பார்த்துக் கொண்டிருந்தபோது, தனது மனைவியின் நிலையைக் குறித்தும், ஒவ்வொரு சிறிய தங்குமிடமும் நிறைந்திருந்ததைக் குறித்தும், அங்கே இடமில்லாததால் மக்கள் சுவரோரமாக உறங்குவதைக் குறித்தும் அவன் நினைத்தபோது, அவனுக்குச் சற்றே சோர்வாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த ஈவிரக்கமற்ற ராஜா தன் அன்பான, சிறிய மனைவியைத் தன் பிறந்த ஊருக்கு வரும்படி வற்புறுத்தினதை அவன் நினைத்தபோது, அது அவனுக்குச் சோர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஒருவேளை இவையெல்லாம் தேவனுடைய மாபெரும் சுழற்சியில் நகர்கின்றன என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை போலும். 21 ஆனால் அவளை அந்தச் சிறிய கழுதையிலிருந்து கீழே இறக்குவதற்காக அவன் திரும்பி, வசதியான ஒரு சிறிய பாறையைக் கண்டுபிடித்தபோது, அவள் பிறந்த ஊரை நோக்கிக் கீழே பார்க்கும்படியாக அவர்கள் மலையுச்சியைத் திரும்பியிருந்தபடியால், அவளை மெதுவாக அழைத்துச் சென்று அவள் சற்று ஓய்வெடுக்கும்படி ஒரு நல்ல இடத்தில் உட்காரவைத்தபோது, அவளது அழகான முகம் இதற்குமுன் ஒருபோதும் பிரகாசிக்காத அளவுக்கு ஒரு தேஜசுடன் பிரகாசிப்பதை அவன் கவனித்தான். ஒருவேளை அவன் இப்படி ஏதாவது சொல்லியிருக்கலாம்: "ஓ, என் அன்பே, நீ மிகவும் சிறப்பான ஒரு அழகான பெண் என்பதை நான் எப்போதும் அறிவேன், ஆனால் இப்போது இருப்பதைப் போல உன்னை இவ்வளவு அழகாக நான் பார்த்ததே இல்லை." 22 கர்த்தருடைய வருகையின்போது சபை எவ்விதம் தோற்றமளிக்க வேண்டும், அது எவ்வளவு அழகாக ஒழுங்கில் இருக்க வேண்டும் என்று நான் வியக்கிறேன். அதின் வஸ்திரங்கள் ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டிருக்க வேண்டும், தேவனுடைய தெய்வீக ஒழுங்குகள் அனைத்தும் அதில் பரிபூரணமாக வரிசைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும், எந்த முரண்பாடும் இல்லாமல், அந்தத் தருணத்திற்காகக் காத்துக்கொண்டிருக்க வேண்டும்; தேவன் அதை அப்படியே வைத்திருப்பார். 23 அவன் அவளுடைய அழகான முகத்தைக் கவனித்ததை நாம் பார்க்கிறோம், அவன் சொன்னான், "மரியாள், உன் முகம் அப்படியே பிரகாசிக்கிறது." ஆனால் அவள் அவனைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை, அவளது அழகான கண்கள் வானத்தை நோக்கிக் கொண்டிருந்தன. அவன் அவளது பார்வையின் திசையைப் பின்தொடர்ந்தான், அவன் தன் வாழ்நாளிலெல்லாம் பார்த்திராத மிக அழகான நட்சத்திரங்களில் ஒன்று அந்தச் சிறிய நகரத்தின் மீது தொங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தான். ஒருவேளை அவன் இப்படிச் சொல்லியி ருக்கலாம்: "அந்த நட்சத்திரம், நான் இதுவரை அதைக் கவனிக்கவே இல்லை, அங்கிருந்துதான் அந்தப் பிரதிபலிப்பு உன் அழகான முகத்தின் மீது வருகிறது." 24 ஓ, தேவன் இன்றிரவு தமது கிருபையையும் தமது அழகையும் சபையின்மீது பிரதிபலிக்கச் செய்வாரானால்! சபை அந்த நிகழ்விற்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளும்போது, அவர் அதைச் செய்ய விரும்புகிறார். 25 ஒருவேளை அவள் இதுபோன்று சொல்லியிருக்கலாம்: "யோசேப்பு, சூரியன் மறையத் தொடங்கியவுடனேயே, நாம் இன்னும் மலையின் அடிவாரத்தில் இருந்தபோதே, நான் அந்த நட்சத்திரத்தைக் கவனித்தேன். நான் மலையில் ஏறிவரும் வழியெல்லாம் அது என்னைப் பின்தொடர்ந்தது போலவே எனக்குத் தோன்றுகிறது, என்னால் அதிலிருந்து என் கண்களை விலக்கவே முடியவில்லை." 26 அவன் அவளது கையைப் பிடித்துக்கொண்டபோது, பூமியில் இதுவரை நடந்தவர்களில் மிகப்பெரியவருடைய பிறப் பிற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பாக, அங்கு நின்றுகொண்டிருந்த அந்த இளம் தம்பதியினர் இருவரும், கைகோர்த்தபடி, பெத்லகேமின் மீது தொங்கிக்கொண்டிருந்த அந்தப் பெரிய நட்சத்திரத்தை நோக்கி, கிழக்குத் திசையை முகம்நோக்கி நின்றார்கள். 27 சற்று நேரம் நாம் கிழக்கு நோக்கிப் பயணம் செய்வோம், மிகத் தொலைவில் உள்ள கிழக்குப் பகுதிக்கு, பள்ளத்தாக்குகளைக் கடந்து, மலைகளுக்கு மேலாக, தீவிர கிழக்குப் பகுதிக்குச் சென்றால், அங்கே தானியேலின் நாட்களில் மேதியர்-பெர்சியர்கள் என்று அறியப்பட்ட சில சாஸ்திரிகள் இருந்தார்கள். அவர்கள் ஒரே மெய்யான தேவனை ஆராதித்தார்கள், ஒரு புனித நெருப்பின் மூலமாக அவர்கள் அவருக்காகக் காத்தி ருந்தார்கள். அவர்கள் மலையின் உச்சிக்குச் சென்று, வானத்திலுள்ள அனைத்துப் பொருட் களையும் ஆராய்ந்தார்கள், ஏனெனில் அவர்கள் யோபுவின் புத்தகத்திலும், நட்சத்திரங்களின் அசைவுகளையும், நட்சத்திரங்களின் பெயர் களையும் கற்றுக்கொண்டார்கள், மேலும் அந்த ஒரே மெய்யான தேவன் நட்சத்திரங்கள் மூலமாக தங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பதற்காக அவர்கள் காத்திருந்தார்கள். 28 நாம் வேதத்தைப் படிப்பதைப் போலவே அவர்களும் அந்த நட்சத்திரங்களை ஆராய்ந் தார்கள். அவர்கள் அந்த வானத்துப் பொருட் களை ஆராய்ந்தபோது, அது பண்டைய பிதாக்களிடமிருந்து சுருள்களாகக் கையளிக்கப் பட்டது. ஒவ்வொன்றும் எங்கே இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள், ஒன்று தனது இடத்திலிருந்து சற்றே நகர்ந்தாலும், அதை அவர்கள் அறிந்தார்கள். 29 இரவுதோறும், அவர்கள் தங்கள் சடங்குகளை நடத்தினார்கள். மேலும், ஒரே மெய்யான தேவன் இருக்கிறார் என்று அவர்கள் இப்போது விசுவாசித்தார்கள். இன்று நாம் அவர்களை பெரும்பாலும் முகமதியர்கள் என்றே அறிவோம். பின்பு அவர்கள் பார்த்துக் காத்திருக்கும் போது, ஒரு நெருப்பை உண்டாக்கி, அதைப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள், புனிதப் பாடல்களைப் பாடி தேவனை ஆராதிப்பார்கள், அந்த நெருப்பைப் பார்த்துக் கொண்டே, அவர்கள் வேத வாக்கியங்களைக் குறித்தும், மற்றும் இதுபோல பல காரியங்களைக் குறித்தும் விவாதிப்பார்கள். அதன்பின் அவர்கள் ஒரு வான்நோக்கு நிலையம்போன்ற இந்தப் பெரிய கோபுரத்தில் ஏறிச் சென்று, இரவு முழுவதும் வானத்தின் பொருட்களைக் கவனிப்பார்கள். அவைகளின் அசைவுகள் அக்கினியின் தேவனிடமிருந்து தங்களுக்கு வரும் வெவ்வேறு அடையா ளங்களைக் குறிக்கின்றன என்று அவர்கள் விசுவாசித்தார்கள். 30 ஒரு நாள் இரவு அவர்கள் அமர்ந்திருந்த போது, ராஜ்யங்களின் எழுச்சி மற்றும் சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சி மற்றும் பூமியில் நடந்த காரியங்கள், பூர்வகால வரலாறுகள் போன்றவற்றைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்த போது, தானியேலின் சுருளை எடுத்து, தானியேல் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த நேரமாக அது இருந்திருக்க வேண்டும், ஏனெனில் அவர் அவர்களுடன் பேசியிருக்க வேண்டும், தானியேல் 2-ம் அதிகாரம் அவரே அவர்களின் தலைவர் என்று கூறுகிறது, எனவே, அவர்கள் அவருடன் உரையாடியிருக்க வேண்டும், கைகளால் பெயர்க்கப்படாமல் ஒரு கல் மலையிலிருந்து பெயர்ந்து வரும் ஒரு காலம் வரும் என்றும், அது உலகத்தின் ராஜ்யங்களை இடித்துப்போடும் என்றும் தானியேல் தீர்க்கதரிசனம் உரைத்திருந்த ஒரு சுருளை அவர்கள் எடுத்தார்கள், அவர்கள் அதை வாசித்திருக்க வேண்டும். பின்பு அவர்கள் எண்ணாகமப் புத்தகத்திலிருந்த சில எபிரெய சுருள்களையும் வைத்திருந்தார்கள், அதில் யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும் என்று பிலேயாம் சொல்லியிருந்தார். 31 அவர்கள் இந்தக் காரியங்களைக் குறித்துச் சிந்தித்து, விவாதித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான், அந்த அந்நியர் வானத்தில் தோன்றியிருக்க வேண்டும். ஒவ்வொன்றையும் அறிந்து, அவற்றின் பெயர்களையும், அவற்றின் பாதை களையும் அறிந்திருந்த அந்த மக்களுக்கு, திடீரென்று எல்லாவற்றையும்விடப் பிரகாசமான ஒன்று இங்கே இருப்பதை, ஒரு புதிய நட்சத்திரத்தைக் கண்டது எதைக் குறிக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? அவரே பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம், பள்ளதாக்கின் லீலி, சாரோனின் ரோஜா, பதினாயிரங்களிலும் சிறந்தவர் என்பதை நாம் அறிவோம். வானத்தில் வந்த இந்தப் புதிய பார்வையாளர் அவர்களை எச்சரித்திருக்க வேண்டும். 32 இந்த சாஸ்திரிகள் இதைக் காண்பதற்குச் சிலாக்கியம் பெற்றவர்களாக இருந்திருக்க மாட்டார்கள் என்று யாராவது நினைக்கலாம், ஆனால் நீங்கள் அப்போஸ்தலர் நடபடிகளில் வாசித்தால், தேவன் பட்சபாதமுள்ளவர் அல்ல என்பதையும், தமக்குப் பயந்து நீதியைச் செய்கிற எந்த ஜாதியாரையும் அவர் சந்திப்பார் அல்லது ஏற்றுக்கொள்வார் என்பதையும் தான் அறிந்துகொண்டதாகப் பேதுரு கூறினார். தேவன் பட்சபாதமுள்ளவர் அல்ல. பின்னர்... (சகோதரன் என்ன கேட்கிறார் என்று யாராவது பாருங்கள்.) 33 அப்போது யாராவது அந்தப் பரலோகப் பார்வையாளரைப் பார்த்து, "இதன் அர்த்தம் என்னவென்று ஆச்சரியமாக இருக்கிறது," என்று சொல்லியிருக்க வேண்டும். 34 இந்த சாஸ்திரிகள் ஏன் என்று அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை... இன்றைய மக்களுக்கும் புரிவதில்லை. அந்த சாஸ்திரிகள் அந்த நட்சத்திரத்தைப் பார்த்தார்கள் என்பதும், அது வான்நோக்கு நிலையங்களைக் கடந்துசென்றது என்பதும் உங்களுக்குத் தெரியுமா, மேலும் அதை வேறு யாரும் பார்த்ததாக நமக்கு எந்த வரலாறும் இல்லையே? ஏன்? ஏனென்றால் அவர்கள் அதைத் தேடவில்லை. அவர்கள் நட்சத்திரத்தைப் பார்த்தார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் அதைப் பார்த்தார்கள் என்று வேதம் கூறுகிறது. 35 மக்கள் பார்க்க வேண்டிய காரியங்களை, அதாவது வெளிப்படுத்தப்படும் தேவனுடைய இரகசியங்களை இன்று அவர்கள் காணாமல் இருப்பதற்கு அதுவே காரணம், ஏனென்றால் அவர்கள் அதைத் தேடவில்லை. தமக்கு இடமளிப்பவர்களுக்கும், தம்மை எதிர்பார்ப் பவர்களுக்கும் மட்டுமே தேவன் தம்மை வெளிப்படுத்துகிறார். 36 ஓ, கடந்த இரண்டு மூன்று இரவுகளாக நடந்த ஆராதனைகளில், பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு இரவும் நம்மை அந்த இடத்திற்குக் கொண்டுவந்ததை நீங்கள் கவனித்தீர்களா? எதிர்பார்ப்பு, யாரோ ஒருவர் வழிநடத்தப் படுகிறார், ஏதோ ஒன்று நடக்கும் என்று எதிர்பார்க்கிறார். அதிலுள்ள காரியம் என்ன வென்றால், நாம் போதுமான அளவு எதிர்பார்க்கவில்லை. இன்றிரவு இங்கு நோயுற்றும், வேதனையுற்றும் இருக்கும் மக்கள் குணமடைந்து வீட்டிற்குச் செல்வோம் என்ற எதிர்பார்ப்போடு வந்தால், நீங்கள் குணமடைந்து வீட்டிற்குச் செல்வீர்கள். இன்றிரவு இங்குள்ள நீங்கள் பரிசுத்த ஆவியின் முழுக்காட்டுதலை ஒருபோதும் பெறவில்லை என்றால்... ஓ, இது உங்களுக்கு மர்மமாகத் தோன்றலாம், ஆனால் தேவனுடைய வார்த்தை அதைப் போதிக்கும் வரை, அதுவே போதும், தேவன் அப்படிச் சொன்னார், அதுவே அதைத் தீர்த்து வைக்கிறது. 37 என்னைப்பொறுத்தவரை, ஏதோ நடக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். "என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி ஜெபம்பண்ணினால், அப்பொழுது பரலோகத் திலிருந்து நான் கேட்பேன்," என்று எழுதப் பட்டிருக்கிறது. இன்று நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன், மற்றவர்களும் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும், ஏதோ ஒன்று நடக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். மக்களின் தலைக்கு மேலாகச் செல்லும் காரியங்கள் நடக்கலாம், ஜீவனுக்கு நியமிக்கப்படாத அநேகரால் அதை ஒருபோதும் காண முடியாது. 38 இயேசு வந்தபோது, அவர் வருவார் என்று பல்லாயிரக்கணக்கானோர், ஆம், லட்சக்கணக்கானோர் எதிர்பார்த்துக் காத்திருந் தார்கள், ஆனால் அவர் தம்மைக் கொஞ்சப் பேருக்கு மட்டுமே வெளிப்படுத்தினார். பாருங்கள், ஏதோ ஒன்றைத் தேடுகிறவர்களுக்கு, இதயத்தில் ஒரு துடிப்பைக் கொண்டு, அடித்துக்கொண்டு, காத்திருந்து, ஏதோ ஒன்று நடக்க வேண்டும் என்று ஏங்குபவர்களுக்கு மட்டுமே. அது நடக்கும் என்று விசுவாசித்து, அந்த நிகழ்வுக்காகக் காத்திருப்பவர்களுக் காகத்தான் இயேசு வருவார், அவருடைய வெளிப்படுதலை விரும்புகிறவர்களுக்காகவே அவர் வருவார். நீங்கள் யாரையாவது நேசித்து, அவர்கள் தோன்றுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்த்தால், அதற்கான ஒவ்வொரு ஆயத்தத்தையும் நீங்கள் செய்வீர்கள். 39 கர்த்தருடைய வருகைக்காக ஒவ்வொரு ஆயத்தத்தையும் செய்து, ஒவ்வொரு அடையாள பலகையையும் கவனித்துக்கொண்டு, சபை யானது இன்றிரவு அப்படித்தான் இருக்க வேண்டும். தேவன் ஏதோ செய்வதை நீங்கள் காணும்போது, மகிழுங்கள், ஏனென்றால் அது அவருடைய வருகையைச் சுட்டிக்காட்டுகிறது. நாம் இப்போது ஏறக்குறைய அந்தச் கடைசி அடையாள பலகையில் இருக்கிறோம், விடிவதற்குள் அவர் தோன்றலாம். 40 அந்த சாஸ்திரிகள், இந்த நட்சத்திரம் தோன்றியபோது, அவர்கள் எவ்வாறு சுருள்களைத் தேடத் தொடங்கினார்கள், அது ஒரு தீர்க்கதரிசனம் நிறைவேறுவதை அவர்கள் கண்டார்கள். ஓ, அந்த நட்சத்திரம் தோன்றும் என்று தேவன் பேசியிருந்ததை அவர்கள் பார்த்தபோது, அது அங்கே இருந்ததைக் கண்டு, அவர்களுக்குள் அளவற்ற பெரும் மகிழ்ச்சி இருந்திருக்க வேண்டும். 41 அந்த சாஸ்திரிகள், நாம் அவர்களை வானியலாளர்கள் என்றெல்லாம் சொல்ல முயலுகிறோம், நம்மிடம் வேதாகமமும், போதகர்களும் இருக்கும்போது, தேவன் தமது அடையாளங்களையும் அற்புதங்களையும் நமக்கு முன்பாக வைத்திருக்கும்போது, நாம் அதை விட்டு விலகிச் செல்லும்போது, வெறும் ஒரு சிறிய சுருள்களை மட்டும் வைத்துக் கொண்டிருந்த அவர்களை நம்மால் குற்றப் படுத்த முடியுமா என்று நான் ஆச்சரியப் படுகிறேன். ஏன், அது லாஸ் ஏஞ்சல்ஸின் கசடுகளை எரித்துப்போடும் ஒரு எழுப்புதலை உருவாக்க வேண்டும்! அவர் இங்கே இருக்கும் என்று சொன்ன அடையாளங்கள், அதைச் செய்யப் போதுமானதாக இருக்கிறது. ஓ, சுவரிலுள்ள கடிகாரம் நேரத்தைத் துடித்துக் கழிப்பதைப் போலவே, வேதவாக்கியம் வெளிப்படுவதைக் காண்பது எனக்கு எவ்வளவு பிடிக்கும். 42 அவர்கள் அதைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, ஒருவேளை, அவர்களில் ஒருவன், "பாருங்கள், தானியேல் நம்மிடம் கொடுத்த அந்தச் சுருளோடு இது ஒத்துப் போகிறதா என்று நான் நினைக்கிறேன்..." தீர்க்கதரிசியாகிய பிலேயாம் யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும் என்று சொன்ன, அந்த எண்ணாகமப் புத்தகம் எனப்படும் அந்தச் சுருளோடு இது ஒத்துப் போகிறதா என்று நான் நினைக்கிறேன். அது அந்த நட்சத்திரமாக இருக்குமோ என்று நினைக்கிறேன்" என்றான். 43 மற்றொருவன், "இதைப் போல் ஒன்றை நாங்கள் பார்த்ததே இல்லை" என்றான். அப்போது அவர்களுக்கு உண்மையான ஒரு யூபிலி கொண்டாட்டம் இருந்திருக்க வேண்டும். அந்த அழகிய, பரலோக ஈவு வானத்தில் நகர்வதைக் காண அவர்கள் நெருப்பை விட்டுவிட்டுக் கோபுரத்தின் மீது ஏறினார்கள். 44 நீங்கள் கேட்கலாம், "ஒரு ஈவா?" 45 ஆம், இரட்சகரிடம் அவர்களை வழிநடத்துவதற்காக அது அவர்களுக்கு ஒரு ஈவாக இருந்தது. தங்களுக்கு அனுப்பப்பட்ட அந்த ஈவை அவர்கள் விசுவாசித்தார்கள், ஆனால் தேவன் இந்தக் கடைசி நாட்களில் இயேசுவிடம் நம்மை வழிநடத்துவதற்காகத் தேவனுடைய ஈவாகிய பரிசுத்த ஆவியானவரை அனுப்பியிருக்கிறார், இருந்தும் நாம் அதை விசுவாசிக்கவில்லை; உலகத்தைக் குறித்து நான் பேசுகிறேன். 46 இன்றிரவு வானொலி மூலம் கேட்டுக் கொண்டிருக்கும் நீங்களும் அதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கர்த்தராகிய தேவன் தம்மை வெளிப்படுத்தும் ஒரு எழுப்புதல் இந்த நகரத்தில் நடந்து கொண்டிருக்கும்போது நீங்கள் எப்படி வீட்டிலேயே இருக்க முடியும்? உண்மையுள்ள, பசியுள்ள ஒரு இதயம் தேவனிடம் நெருங்க விரும்பும், மேலும் தேவனிலிருந்து வருகிறது என்று தாங்கள் அறிந்த ஒவ்வொரு அசைவிற்கும் அவர்கள் செல்வார்கள், அவர்கள் தேடுவார்கள், நாடுவார்கள், பசியும் தாகமுமாய் இருப்பார்கள், தேவனைப் பார்க்க ஏங்குவார்கள். வாருங்கள், சாஸ்திரிகள் செய்ததைப்போல வேதாகமத்தை எடுத்து அதை வாசியுங்கள், செய்யப்படுகிற காரியங்களோடு வேதவாக்கியங்கள் ஒத்துப் போகிறதா என்று பாருங்கள், அப்படி இருந்தால், அளவற்ற பெருமகிழ்ச்சியோடு சந்தோஷப்பட உங்களுக்கு உரிமை இருக்கிறது. 47 இரவுக்குப் பின் இரவாக அவர்கள் மேலே சென்று, இந்தப் புதிய பார்வையாளரைக் கவனித்தபோது, அவர்கள் இதைப் போன்ற ஒன்றைப் பார்த்ததே இல்லை, அது அங்கே இருக்கும் என்று வேதவாக்கியங்கள் கூறியது அவர்களுக்குத் தெரியும், ஆனால் அவர்கள் தங்கள் வாழ்நாளில் வானத்தில் இருந்த இதைப் போன்ற ஒரு ஈவை ஒருபோதும் பார்த்திருக் கவில்லை, அதை அவர்கள் ஒவ்வொரு கோணத்திலிருந்தும் ஆராய்ந்தார்கள், அவர்களால் சொல்ல முடிந்த ஒரே காரியம், "வேதவாக்கியம் இதை அறிவிக்கிறது" என்பதுதான். 48 எனவே, ஒரு நாள் இரவு, ஒருவன் விழித்திருந்து கவனித்து, ஆராய்ந்து கொண்டிருந்த போது, அது நகரத் தொடங்கி, மேற்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்தது என்று நாம் சொல்லலாம். ஒருவன் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது, அவன் எழுந்து, "சகோதரர்களே, நான் அந்த நட்சத்திரத்தைக் குறித்து ஒரு கனவு கண்டேன், ராஜா, தேவன் பிறந்திருக்கிறார் என்பதற்கு அது ஒரு அடையாளமாகும். அவர் யூதர்களின் ராஜா, அவர் பரலோகத்தின் ராஜா, அவர் எல்லா மக்களுக்கும் ராஜா, நாம் சென்று அவரை ஆராதிக்க வேண்டும்," என்று சொல்லியி ருக்கலாம். 49 அப்படிப்பட்ட ஒரு உறுதிப்படுத் தலுடன், தங்களால் பெறக்கூடிய மிகவும் விலையுயர்ந்த பொருட்களை அவர்கள் ஒன்றுசேர்த்திருப்பார்கள் என்று நான் கற்பனை செய்கிறேன். யாராவது சென்று இந்தப் பரிசுகளை எடுத்துச் செல்ல வேண்டும், ஒருவேளை அவர்கள் சீட்டுப் போட்டிருக்கலாம், அது அவர்களில் மூவர் மீது விழுந்தது. அவர்கள் தங்கள் ஒட்டகங்களில் பொன், வெள்ளைப்போளம், தூபவர்க்கம் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு, நட்சத்திரம் இரவில் மீண்டும் தோன்றும் வரை காத்திருந்தார்கள், அது தனது இடத்திலிருந்து நகர்ந்து மேற்கு நோக்கி வழிநடத்துவதை அவர்கள் கவனித்தார்கள், அவர்கள் தங்கள் ஒட்டகங்களில் ஏறி, மலைகளுக்கு மேலாகச் சென்றார்கள். 50 உங்களுக்குத் தெரியும், சில நேரங்களில் அவர் வழிநடத்தும் பாதை மிகவும் கரடுமுரடானதாக இருக்கும். அவர் எந்த வழியில் வழிநடத்துகிறார் என்பது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது, நாம் அங்கே சென்றடைய வேண்டும், அதுதான் முக்கியம். கவிஞர் அதை வெளிப்படுத்தியிருப்பது போல: சிலர் தண்ணீர்கள் வழியாக, சிலர் வெள்ளங்கள் வழியாக, சிலர் ஆழமான சோதனைகள் வழியாக, ஆனால் அனைவரும் இரத்தத்தின் வழியாக. 51 தேவன் தம்முடைய பிள்ளைகளை வழிநடத்துகிறார். ஒட்டகங்களில், அவர்கள் கரடுமுரடான மற்றும் செங்குத்தான மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகள் வழியாகக் கீழே இறங்கினார்கள். நாமும் அப்படித்தான் செல்கிறோம், சில நேரங்களில் பள்ளத்தாக்கில், சில நேரங்களில் மலையின் மீது, ஆனால் அப்படியே தொடர்ந்து பின்தொடருங்கள், நாம் தேவ ஆவியின் வழிநடத்துதலைத் தொடர்ந்து பின்பற்றினால் அங்கே சென்றடைவோம். 52 அவர்கள் மலைகளைக் கடந்தவுடன், தெற்கு நோக்கிச் சென்றிருக்க வேண்டும், தைக்கிரிஸ் (Tigris) நதியைக் கடந்து, சமவெளிகளுக்கு வந்தபோது, அந்த நட்சத்திரம் ஒருபோதும் அவர்களைக் கைவிடவில்லை. தேவனுடைய ஈவில் உள்ள அழகான பகுதியே அதுதான், அது தோல்வியடைய முடியாது, ஏனென்றால் அது தேவன். 53 அவர்கள் அதைக் கவனித்தார்கள், இரவுக்குப் பின் இரவாக அது அவர்களை வழிநடத்தியது, வாரத்திற்குப் பின் வாரமாக, மாதத்திற்குப் பின் மாதமாக அவர்கள் பள்ளத்தாக்குகள் மற்றும் சமவெளிகள் போன்ற வைகளைக் கடந்துசென்றபோது, இறுதியாக, அது நேராக எருசலேமுக்கு அவர்களை வழிநடத்தியது. இதில் விசித்திரமான காரியம் என்னவென்றால், அது யூத மதத்தின் தலைநகரமான, யூத மதத்தின் இருப்பிடமான, முற்பிதாக்களும் மற்றும் பழங்காலத்துப் பெரிய தீர்க்கதரிசிகளும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, இந்தக் காரியங்களை முன்னறிவித்த இடமாகிய எருசலேமுக்கு வந்தபோது, நட்சத்திரம் நேராக அந்த இடத்திற்கு வழிநடத்தியது, ஆனால் அவர்கள் அங்கே சென்றடைந்தபோது, நட்சத்திரம் மறைந்துவிட்டது. ஏன்? எருசலேம் அதைத் தேடவில்லை. 54 இன்று நாம் இந்தச் சமூக சுவிசேஷப் போதனைகள் போன்றவற்றிற்கு வரும்போது, அதுதான் பிரச்சனையாக இருக்கிறது, இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களை அவர்களால் ஏன் நம்ப முடியவில்லை? அவர்கள் அதைத் தேடவில்லை. வெளிச்சம் அணைந்துவிட்டது, அவர்கள் கோட்பாடுகளின் மூலமாகத் தேவனை ஆராதிக்கிறார்கள், ஆனால் இயேசு, "தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்" என்றார், கோட்பாடுகள் அல்ல, மதப்பிரிவுகளைக் குறித்த சண்டைகள் மூலமாக அல்ல, அன்பின் ஆவியிலும் உண்மையிலுமே ஆராதிக்க வேண்டும். உண்மை என்றால் என்ன? "நானே சத்தியம் (உண்மை)" என்று இயேசு சொன்னார். 55 அது எருசலேமுக்கு வந்து மங்கிப் போனபோது... நீங்கள் கவனித்தீர்களா, ஒரு ஈவு தேவையற்ற இடத்தில் தங்காது, அல்லது தன்னைப் பிரகாசமாக்கிக் கொள்ளாது, அல்லது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாது? அது மங்கிப்போய், விலகிச் சென்றுவிடும். பின்னர் மக்கள் சொல்வார்கள், "ஏன், அது இன்னார்-இன்னாரிடம்தான் வர வேண்டும், ஏனென்றால் அதுதான் பெரியது, அதுதான் மிகப் பெரியது." அதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 56 பின்பு, "அது யூத மதத்தின் மையமாக இருந்தால்," முக்கிய சபை அங்கு இருந்தது, முக்கிய விசுவாசிகளின் சரீரம் அங்கு இருந்தது என்று அவர்கள் நினைத்தபடி, பிரதான ஆசாரியர் மற்றும் சுருள்களை வைத்திருந்த அனைத்துப் பெரிய மனிதர்களும், அவர் களுடைய பெரிய பள்ளிகளும் அங்கு இருந்தன, "நிச்சயமாக, ராஜா அங்கேயும்தான் இருப்பார்" என்று சாஸ்திரிகள் ஒருவேளை நினைத் திருக்கலாம். 57 நட்சத்திரம் அவர்களை விட்டு விலகிய போது, "யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக் கிறவர் எங்கே?" என்று கத்திக்கொண்டே அவர்கள் தெருக்களில் அங்குமிங்கும் அலைந்து நகரத்தின் கவனத்தை ஈர்த்தார்கள். 58 அதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ஒவ்வொரு பெரிய வீதிகள் வழியாகவும், சிறிய குறுக்குத் தெருக்கள் வழியாகவும் சென்ற அவர்களை மக்கள் கவனிக்க வேண்டியிருந்தது, அவர்கள் செல்வந்தர்களாக இருந்தார்கள். இன்று நான் அவர்களை கிறிஸ்தவ வர்த்தகர்கள் என்று அழைப்பேன் போலும். 59 சிறந்த அலங்காரங்களால் அலங்கரிக்கப் பட்ட இந்த ஒட்டகங்களின் மீது அவர்கள் சவாரி செய்துகொண்டிருந்தார்கள், அந்த மனிதர்களிடம் ஏதோ விசேஷம் இருப்பதை மக்கள் அறிந்திருந்தார்கள், ஆனால் அவர்களை எச்சரித்தது இதுதான், அவர்கள் கேட்டுக் கொண்டிருந்த இந்தக் கேள்வி: "யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? ஏனெனில் நாங்கள் கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம்" என்பதே. 60 பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய அந்த உண்மையான பரிசுத்த ஆவியானவரையும், தேவனுடைய உண்மையான ஈவையும் கண்டடைய விரும்பும் அநேக மில்லியனர்களின் பசியுள்ள இதயம் இன்றிரவு அப்படித்தான் இருக்கிறது: "இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவரா யிருக்கிறார் என்று நாங்கள் வேதாகமத்தில் வாசித்திருக்கிறோம்: அது எங்கே? அவர் ஒரு பெரிய குணமாக்குபவர் என்று வாசித்திருக் கிறோம்: அது எங்கே? 'பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உரியவர்' என்று வாசித்திருக்கிறோம். நமது சபைகளில் அது எங்கே? புதன்கிழமை இரவு தொலைக் காட்சியை அணைத்துவிட்டு சபைக்குச் செல்ல வைக்கும்படி, சபையை அக்கினியாய் மாற்றும் அந்த வல்லமை எங்கே? நம்முடைய பெண்களைப் பெண்களைப்போல ஆடை அணியச் செய்யும் அந்த வல்லமை எங்கே? தேவனுடைய மகிமைக்காகத் தொடர்ந்து சாட்சிகூறிக் களத்திற்குச் செல்லும்படி ஒரு ஆத்துமாவை மிகவும் அக்கினியாய் மாற்றும் அந்த வல்லமை எங்கே?" 61 இன்று, பெந்தெகொஸ்தே வட்டாரங் களிலும் கூட, அவர்கள் சாட்சி சொல்வதற்கு வெட்கப்படுகிறார்கள். "கிறிஸ்துவின் சுவிசேஷத் தைக் குறித்து நான் வெட்கப்படேன், விசுவா சிக்கிற எவனுக்கும் இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது" என்று பவுல் சொன்னார். இது வெறும் கோட்பாடுகளின் அறிவிப்பு அல்ல, விசுவாசிக்கிற ஒவ்வொரு வருக்கும் இரட்சிப்பு உண்டாவதற்கு இது தேவபெலனாயிருக்கிறது. 62 ஏன்? "கடைசி நாட்களில், அவர்கள் துணிகரமுள்ளவர்கள், இறுமாப்புள்ளவர்கள், இன்பப் பிரியர்கள்," பொழுதுபோக்கை விரும்பு வார்கள், "தேவப்பிரியராயிராமல் இன்பப் பிரியராயிருப்பார்கள், தேவபக்தியின் வேஷத் தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிற வர்களாயிருப்பார்கள்" என்று வேதவாக்கியங்கள் கூறியது. 63 "அற்புதங்களின் நாட்கள் முடிந்து விட்டன" என்று அவர்கள் சொல்கிறார்கள். "பெந்தெகொஸ்தே நாளில் அவர்களுக்கு இருந்ததைப் போலப் பரிசுத்த ஆவியின் முழுக்காட்டுதல் போன்ற ஒன்று இன்று இல்லை" என்கிறார்கள். 64 அதற்குக் காரணம், அதைக் குறித்து என்னிடம் சொல்ல அவர்கள் மிகவும் தாமதமாக வந்துவிட்டார்கள், நான் ஏற்கனவே அதைப் பெற்றுக்கொண்டேன், அதுதான் உண்மை என்பது எனக்குத் தெரியும். தேவன் மரித்தோரிலிருந்து எழுப்பிய அதே இயேசுதான் என் இரட்சகர் என்பது எனக்குத் தெரியும், அவர் என் இருதயத்திலும், அவரை ஏற்றுக்கொள்ளும் எந்தவொரு விசுவாசியின் இருதயத்திலும் வாழ்கிறார். அவர் உங்கள் வாழ்க்கையை மாற்றுவார், உறுதியான ஒரு இரட்சிப்பையும், மற்றும் அவருடைய உயிர்த்தெழுதலின் சாட்சியையும் உங்களுக்குத் தருவார். 65 ஆனால் எருசலேமிடம் அதற்கான பதில் இல்லை. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதவாக்கியம் கூறுகிறது. சபை அதற்கான பதிலைக் கொண்டிருக்கவில்லை, அவர்கள் சொல்கிறார்கள், "அவர் எப்படி இருந்தாரோ அதில் ஒரு பகுதியாக இருக்கிறார், நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும் என்று அவர் இன்னும் விரும்புகிறார், ஆனால் அடையாளங்களும் அற்புதங்களும் இன்னும் தோன்றவில்லை." 66 இயேசு, "உலகமெங்கும் போங்கள்" என்றார். எவ்வளவு தூரம்? "உலகமெங்கும்." பூமியில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் சுவிசேஷத்தை இன்னும் கேட்கவேயில்லை. இது எவ்வளவு காலம் நீடிக்கும்? "உலகமெங்கும்." யாரிடம்? "சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்." 67 சுவிசேஷம் என்றால் என்ன? பவுல் சொன்னார், "சுவிசேஷம் வார்த்தையின் மூலமாக மட்டும் வரவில்லை, ஆனால் வல்லமையின் மூலமாகவும் பரிசுத்த ஆவியின் வெளிப்பாடுகள் மூலமாகவும் வருகிறது." 68 "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன." ஓ, இன்று நமக்குத் தேவையானது அதுதான்! சகோதரனே, இன்றிரவு இங்கு, உங்கள் சபை அதை நம்பவில்லை என்றால், இன்றிரவு நீங்கள் அதை உங்கள் இதயத்தில் பெற்றுக்கொண்டு, அதை நேராகச் சபைக்கு எடுத்துச் செல்லுங்கள். 69 "அந்தத் தேவன் எங்கே? அப்படியிருந்தவர் எங்கே? சரித்திரத்தின் அந்தத் தேவன் எங்கே?" என்று உலகம் இன்று கேட்கிறது. சரித்திரத்தின் தேவன் இன்றும் அதே தேவனாக இல்லை என்றால், அவர் இன்று அதே தேவனாக இல்லாதபட்சத்தில் சரித்திரத்தின் தேவன் உங்களுக்கு என்ன நன்மையைச் செய்வார்? 70 "அந்தப் பெரிய யெகோவாவுக்கு, சர்வ வல்லமையுள்ளவருக்கு, எல்ஷடாய்க்கு, 'இருக் கிறவராகவே இருக்கிறவருக்கு' என்ன ஆயிற்று? 'இருந்தவராக' இல்லை, 'இருக்கிறவராகவே இருக்கிறவர்.' அவருக்கு என்ன ஆயிற்று?" அவருக்கு எதுவும் ஆகவில்லை, மக்களுக்குத்தான் ஆகிவிட்டது. 71 அவர்களிடம் பதில் இல்லை, எருசலேமிடம் இல்லை, ஆனால் அவர்கள் இந்த ஆட்களைத் தடுக்க முடியவில்லை, இவர்கள் அவரைக் கண்டடைய விரும்பி னார்கள். சகோதரனே, தேவன் எப்போதாவது உங்கள் இதயத்தில் ஏதாவது ஒன்றை நிலைநிறுத்தியிருந்தால், அவரைக் கண்டடைய வேண்டும் என்ற தாகத்தை ஏற்படுத்தியிருந்தால், அவரைக் கண்டடைவதிலிருந்து உங்களை எதுவும் தடுக்கப்போவதில்லை. 72 தெருக்களில் மேலும் கீழுமாக, செல்வந்தர்கள் ஒரு பரிசுத்த-உருளிகளைப் (holy-rollers) போலச் சாட்சி பகர்ந்தார்கள், "அவர் எங்கே? அவர் எங்கே இருக்கிறார் என்று சொல்லுங்கள், யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர், ஏனெனில் நாங்கள் அவருடைய அடையாளத்தைக் கண்டு, அவரை ஆராதிக்க வந்திருக்கிறோம். நாங்கள் கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரை ஆராதிக்க வந்திருக்கிறோம்." அவர்களிடம் அதற்கான பதில் இல்லை; இன்றும் அவர்களுக்கு அது கிடைக்கவில்லை, அதே காரியம்தான். 73 இப்போது கவனியுங்கள், தேவன் சபைக்குள் ஒரு அடையாளத்தை அனுப்பும் போது, சபை அதைப் பார்க்கத் தவறிவிடுகிறது, அன்று அவர்கள் செய்ததைப்போலவே. எனவே, ஆனால் அவர்கள் இதைக் குறித்து எவ்வளவு குழப்பம் செய்தார்கள் என்றால், இதெல்லாம் எதைக் குறிக்கிறது என்பதைக் கண்டறிய அவர்கள் சனகெரிப் சங்கத்தை (Sanhedrin Court) அழைக்க வேண்டியதாயிற்று. அவர்கள் சங்கத்தைக் கூட்டி, பல வருடங்களாகத் தங்களுடைய சொந்தக் கோட்பாடுகளை மட்டுமே வாசித்துக்கொண்டு, ஒருவேளை வாசிக்காமல் விட்டிருந்த வேதவாக்கியங்களைத் திறந்த போது, வேதவாக்கியங்களை வாசிக்கையில், மீகாவின் தீர்க்கதரிசனத்தை எடுத்தார்கள், அது, "யூதேயாவிலுள்ள பெத்லகேமே..." என்று கூறியது. 74 கேளுங்கள், சகோதரனே, இந்த அடையாளங்கள் மற்றும் அற்புதங்களுக்கு சபையிடம் பதில் இல்லை என்றால், தேவனுடைய வார்த்தையிடம் அதற்கான பதில் இருக்கிறது. உங்கள் போதகரிடம் பதில் இல்லை என்றால், தேவனுடைய வார்த்தை யிடம் பதில் இருக்கிறது. நீங்கள் அதற்காகப் பசியோடு இருந்தால், தேவன் அதை வார்த்தையில் உங்களுக்குக் காண்பிப்பார். தேவன் தமது வார்த்தையைக் காத்துக் கொள்கிறார். 75 இது நடக்கவிருந்த இடத்தை அவர்கள் கண்டுபிடித்தவுடனேயே, அவர்கள் நகரத்தை விட்டுப் புறப்பட்டார்கள். ஆலோசனைக் சங்கம் கூடி, தாங்கள் என்ன செய்வோம் என்று சிந்தித்து, இதை ஒழித்துக்கட்ட வேண்டும், மக்கள் மத்தியில் இது பரவிவிடக்கூடாது, இதை அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும், ஏனெனில் இது அவர்களுடைய பாரம்பரியத்தை உடைத்துப் போடும், ஆகையால் அவர்கள் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள். 76 அந்த சாஸ்திரிகள் நகரத்தின் வாசல்களை விட்டு வெளியே சென்றபோது, அந்த இருண்ட இடத்தை விட்டு அவர்கள் வெளியேறிய வுடனேயே, நட்சத்திரம் மீண்டும் தோன்றியது. உலகத்தையும் அதன் பாரம்பரியங்களையும் விட்டு நீங்கள் வெளியே வரும்போது, தேவனுடைய மகிமை உங்களுக்குத் தோன்றி உங்களை வழிநடத்தும். உங்களை விட்டு, உங்கள் பாவங்களை விட்டு, உங்கள் அவிசுவாசத்தை விட்டு நீங்கள் வெளியே வரும்போது, எல்லாவற்றையும் பின்னால் விட்டுவிட்டு, உங்கள் இதயத்தைத் தேவனிடம் உயர்த்தும்போது, தேவன் உங்களுக்குத் தோன்றுவார். 77 அவர்கள் அந்த நட்சத்திரத்தை மீண்டும் கண்டபோது, அவர்கள் மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள் என்று வேதம் கூறுகிறது; அவர்கள் சற்று சத்தமிட்டிருக்க வேண்டும். "மிகுந்த ஆனந்த சந்தோஷம்," ஏனென்றால் தங்களை இரட்சகரிடம் வழிநடத்தப்போகிற அடையாளத்தை அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும், அது அதைத்தான் செய்தது. 78 இன்றிரவு நான் சொல்லட்டுமா, தேவன் இன்று ஒரு அடையாளத்தை வைத்திருக்கிறார், அது அவருடைய ஆவியின் அடையாளமாகும், இயேசு எங்கே இருக்கிறாரோ, அங்கே ஜீவன் இருக்கிறது, ஏனெனில் அவரே ஜீவனாயி ருக்கிறார்; இயேசு எங்கே இருக்கிறாரோ, அங்கே சுவிசேஷத்தின் வெளிச்சம் இருக்கிறது, ஏனெனில் அவரே வெளிச்சமாயிருக்கிறார்; இயேசு எங்கே இருக்கிறாரோ, அங்கே அக்கினி இருக்கிறது, ஏனெனில் அவர் உங்களது அவிசுவாசத்தையும் உங்களது கசடுகளையும் சுட்டெரிக்கும் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறார். 79 இரவுக்குப் பின் இரவாக, அவர் களத்தில் வருவதை நாம் காண்கிறோம், முதலில், தொலைந்துபோன ஆத்துமாக்களை இரட்சிக்கிறார், அதைத் தேடுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவரைக் கொடுக்கிறார், பின்வாங்கிப்போனவர்களைத் திரும்ப அழைக் கிறார்; பின்பற்ற வேண்டிய அடையாளம் அதுதான். பின்பு அவர் வியாதியஸ்தர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் எழுப்பி, அவர் களைக் குணமாக்குவதையும் நாம் காண்கிறோம்; அவர் இப்போது சிறிது காலமாக அதைச் செய்துகொண்டிருக்கிறார். 80 பின்பு முடிவுகாலத்தில் வெளிச்சம் இருக்கும் என்றும், வல்லமையின் பரிபூரணம் வரும் என்றும் அவர் வாக்குத்தத்தம் அளித்தார். தீர்க்கதரிசி சொன்னார், "பகலுமல்ல இரவு மல்லாத ஒரு நாள் வரும், ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்." 81 புவியியல் ரீதியாக, சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது, மேலும் சுவிசேஷம் முதலில் கிழக்கத்தியர்களிடம் வந்தது. நமக்கு இருளுமல்ல வெளிச்சமுமல்லாத ஒரு நாள் இருந்தது, ஒரு மந்தமான நாளாக இருந்தது, அவருடைய குமாரனை நமது இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு நாம் தேவனைக் குறித்துப் போதுமான அளவு அறிந்திருந்தோம், ஆனால் கிழக்கத்திய மக்கள் மீது விழுந்த அந்தப் பெரிய அடையாளங்களும் அற்புதங்களும், கடந்த சில வருடங்கள் வரை மேற்கத்திய மக்கள் மீது விழவில்லை. 82 இப்போது சாயங்கால வெளிச்சங்கள் பிரகாசிக்கின்றன, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமை தனது ஆசீர்வாதங்களைப் பொழிகிறது, மக்களை ஆவியால் நிரப்புகிறது, அடையாளங்களும் அற்புதங்களும் தோன்று கின்றன, மாற்கு 16-ன் அடையாளங்கள் விசுவாசியைப் பின்பற்றுகின்றன. பாருங்கள், இது சாயங்கால நேரம். கிழக்கில் உதித்த அதே வெளிச்சம் மேற்கில் மறைகிறது, இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார். 83 அவர் நம்முடன், நமக்குள்ளே இருக்கிறார் என்பதற்கும், அவர் நம்மைத் தேற்றுவார், நமக்கு உதவுவார், நம்மை ஆசீர்வதிப்பார், கைகளில் தழும்புகளுடனும், விலாவில் குத்தப்பட்டவராகவும் இருந்த அந்த ஒருவரிடம் அவர் நம்மை வழிநடத்துவார் என்பதற்கும் மேசியாவின் அடையாளம் தோன்றியிருக்கிறது. இப்போது இங்கு இருக்கும் இதே பரிசுத்த ஆவியானவர், என்றாவது ஒருநாள் தேவனுடைய வலதுபாரிசத்திற்கு நம்மை எடுத்துச் செல்வார் என்று நான் நம்புகிறேன், அங்கு அவர் அமர்ந்திருப்பதை நாம் காண்போம். அங்கே நாம் அவருடன் என்றென்றும் வாழ்வோம், அவருடைய பிள்ளைகளாக இருப்போம், அவர் நமது தேவனாக இருப்பார்; அதுவே என் இருதயத்தின் விருப்பம், அவருடன் இருக்க வேண்டும் என்பதே. 84 "நாங்கள் கிழக்கிலே அவருடைய அடையாளத்தைக் கண்டு, அவரை ஆராதிக்க வந்திருக்கிறோம்," என்று சாஸ்திரிகள் சொன்னார்கள். 85 வேதவாக்கியம் வாக்குத்தத்தம் அளிக்கிறது, இயேசு தாமே அதை அளித்து, "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்" என்று சொன்னார். இந்தக் காரியங்கள் புறஜாதி சபையில் தோன்ற விருந்தன, அதற்கு விரோதமாகச் சொல்லப்படும் ஒரு வார்த்தையும் ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டாது, ஆனால் அது முன்பு அங்கிருந்த அதே குமாரன், அதே வெளிச்சம் என்பதற்கான அடையாளமாக அது இருக்கும்; அவர் இப்போது இங்கே இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். 86 இப்போது இங்கே அமர்ந்திருக்கும் கூட்டத்தாராகிய நீங்கள் வியாதியுற்றிருந்தால்.. ஏதோ ஒன்று என்னை நிறுத்தச் சொல்கிறது, ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆவியானவரின் வழிநடத்துதலைப் பின்பற்று வதைத் தவிர எனக்கு வேறொன்றும் தெரியாது. நான் சொல்வதற்காக இன்னும் மூன்று அல்லது நான்கு காரியங்கள், கருத்துகள் என் மனதில் இருந்தன, ஆனால் ஏதோ ஒன்று, "இப்போது நிறுத்து" என்று சொன்னது. 87 இந்தக் கூட்டத்தில் யாரோ ஒருவர் ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும், யாரோ ஒருவர் மிகவும் கடுமையான பிரச்சினையில் இருக்க வேண்டும்; அது எனக்குத் தெரியாது. ஆனால் நின்றுகொண்டு, அப்போஸ்தலனாகிய பேதுருவிடம் அவர் யார் என்றும், அவருடைய தந்தையின் பெயர் என்னவென்றும் சொல்ல முடிந்த கர்த்தராகிய இயேசுவையும், அதுபோல அவர் செய்த எல்லா அடையாளங்களையும் நீங்கள் விசுவாசித்தால்... அந்த அடையாளங்களுக்காக அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து, கொன்று, அவரை ஒரு சூனியக்காரர், பெயெல்செபூல், ஒரு பிசாசு என்று ஆக்கினார்கள். 88 இயேசு கிறிஸ்துவின் மீது இருந்த அதே ஆவியானவர் அவருடைய சபையில் இருக்கிறார், நாம் இப்போது அவருடைய ஆவியானவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம், தேவன் அதே காரியத்தைச் செய்வார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நாம் நமது தலைகளைத் தாழ்த்துவோமா. 89 சர்வவல்லமையுள்ள தேவனே, எப்படியோ, எந்த வழியிலோ, எனக்கு அது புரியவில்லை, ஆனால் நீர் அறிவீர், ஆண்டவரே, அங்குப் பயங்கரமான அளவுக்கு வேதனைகள் இருக்க வேண்டும், அல்லது யாரோ ஒருவர் மரணத்திலிருந்து ஒருசில மணிநேரங்களில் இருக்கலாம், அது எனக்குத் தெரியாது, ஆனால் எப்படியோ அது... நான் அந்த சாஸ்திரிகளைப் போல, ஒவ்வொரு அசைவையும் கவனித்துப் பின்பற்ற விரும்புகிறேன், ஏனெனில் என்றாவது ஒருநாள் இந்தப் பரிசுத்த ஆவியானவர் என்னோடுகூட என்றென்றும் வாழ்வதற்காக என்னை உமது சமுகத்திற்குள் எடுத்துச் செல்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன். நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அதற்குப் பயபக்தியுடனும் மரியாதையுடனும் இருந்து, அதைக் கவனித்து, அதற்குக் கீழ்ப்படிவேனாக. 90 ஆண்டவரே, இன்றிரவு இந்தக் கூட்டத்தாரின் மனக்கண்கள் திறக்கப்படட்டும், தேவனுடைய ஆவியானவர் அவர்கள் மீது இருப்பாராக, ஏனெனில் நாங்கள் கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தை, அவருடைய அடையாளத்தைக் கண்டோம். இயற்கைக்கு அப்பாற்பட்ட, பரலோக ஈவுகளுக்கும் அடையாளங்களுக்கும் எருசலேமில் அவர் களிடம் பதில் இல்லை, மேலும் தேவனாகிய கர்த்தாவே, இன்றிரவு இதைச் சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது, ஆனால் இன்றைய சபைகளிடம் அதற்கான பதில் இல்லை, அவர்களில் அநேகருக்கு, அதாவது அவர்களில் மிக அநேகருக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களுக்கான பதில் தெரியவில்லை. அப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் நித்திய இலக்கைத் முத்திரையிடுகிறார்கள் என்பதை அறியாமல், அவர்கள் அதை மனவாசிப்பு (telepathy), அல்லது ஏதோ ஒரு பொல்லாத ஆவி என்று அழைக்க விரும்புகிறார்கள். ஆண்டவரே, நீரே தேவன் என்பது இன்றிரவு அறியப்படட்டும். சரீர ரூபத்தில் கல்லறையிலிருந்து வந்த அதே இயேசு இன்றிரவு பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இங்கே இருக்கிறார். 91 இன்றிரவு நீர் அழைப்பவர்களை இந்தக் கூட்டத்திலிருந்து நீர் இழுத்துக் கொள்ளும் படியாக, எங்கள் இதயங்களைத் தாழ்த்தி, எங்களை, எங்கள் ஆவிகளை உமக்கு ஒப்புக்கொடுக்கக் கூடியவர்களாக நாங்கள் இருப்போமாக, மேலும் எல்லாத் துதியும் உம்முடையதாகவே இருக்கும், ஆண்டவரே. அதே விடிவெள்ளி நட்சத்திரம், ஒரு பரலோக ஈவு எங்களை இயேசு கிறிஸ்துவிடம் ஆழமான ஆழங்களுக்கும் உயரமான உயரங்களுக்கும் வழிநடத்துகிறது என்பதை உணர்ந்தவர்களாக இன்றிரவு நாங்கள் இங்கிருந்து செல்வோமாக. ஏனெனில் அவருடைய நாமத்தில், அவருடைய மகிமைக்காக இதைக் கேட்கிறோம். ஆமென். 92 "நீ விசுவாசிக்கக்கூடுமானால்!" [ஒரு சகோதரி அந்நியபாஷைகளில் பேசுகிறார், மற்றொரு சகோதரி அர்த்தம் சொல்கிறார்] ஆமென். 93 வானொலி நேயர்களே, மற்றும் இங்குப் பார்க்கக்கூடிய கூட்டத்தாரே, தேவனுடைய வார்த்தையில் நான் சரியாகப் போதிக்கப் பட்டிருந்தால், அந்நியபாஷைகளில் பேசுவதற் கும் அர்த்தம் சொல்வதற்கும் சபையில் ஈவுகள் இருக்கின்றன என்று நான் விசுவாசிக்கிறேன். அது ஒழுங்காகச் செய்யப்படும்போது, அதைக் கண்டனம் செய்யக்கூடிய எந்த வேத மாணவனும் இல்லை; செய்தி முடிந்த பிறகு அது ஒழுங்காகவே இருக்கிறது. "கர்த்தர் நடுவில் இருக்கிறார்" என்று அது சொன்னதை நீங்கள் பார்த்தீர்கள். இப்போது, அது எவ்வளவு உண்மையாயிருக்கிறது! கர்த்தர் தமது ஆசீர்வாதங்களைச் சேர்ப்பாராக. 94 ஒருசமயம் நான் ஒரு இளம் பாப்டிஸ்ட் போதகராக இருந்தபோது இந்தக் காரியங்கள் எனக்குப் புரியவில்லை, ஆனால் வேத வாக்கியங்களை வாசித்த பின்பு, இதுதான் உண்மை என்று காண்கிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 95 இந்த வழியைப் பாருங்கள். இப்போது உங்கள் விசுவாசத்தின் மூலம் பிரதான ஆசாரியரின் வஸ்திரத்தைத் தொடுங்கள். நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனாக இருந்தால், கிறிஸ்து பேசட்டும். 96 இப்போது தீர்மானம் எடுக்கும் நேரத்தின் மணிநேரமாக இருக்கிறது, இப்போது ஏதோ ஒன்று சரியா அல்லது தவறா என்று தீர்மானிக்க வேண்டிய நேரமாக இருக்கிறது. அவர் இன்று அதே தேவனாக இல்லை என்றால், கலிலேயாவின் கரைகளில் நின்றுகொண்டு அந்தக் காரியங்களைச் செய்த ஒரு சரித்திரத்தின் தேவனை உங்களுக்குப் பிரசங்கிப்பது எனக்கு என்ன நன்மையைச் செய்யும்? அவர் அப்படியே இருக்கிறார் என்று நான் உரிமை கொண்டாடியிருக்கிறேன். 97 என்னால் மக்களைக் குணமாக்க முடியாது, அது அனைவருக்கும் தெரியும், ஆனால் மற்றுமொரு நாள் இரவு கடலுக்கு அப்பால் வெகு தொலைவில் வேதனைப்படும் ஒரு நபரைக் காண முடிந்து, இங்கு வந்து, பேசி, தனது அன்பானவர்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை அந்தப் பெண்ணிடம் மிகச் சரியாகச் சொல்ல முடிந்தது எந்த ஆவி? உடனே, கடலுக்கு அப்பாலிருந்து இங்குச் செய்தி வந்தது: தேவன் அதைச் செய்துவிட்டார். நண்பர்களே, நம் நடுவில் இருப்பது ஜீவனுள்ள தேவன் என்ற உண்மைக்கு நீங்கள் விழித்தெழ முடியவில்லையா? 98 நான் அந்த மற்றுமொரு இரவில் சொன்னதைப்போல, சபையின் முன்பாக எத்தனையோ ஈவுகள் கொண்டு வரப்பட்டிருக் கையில், அவர்கள் பக்கவாதமடைந்தவர்களைப் போல வெறித்துப் பார்த்துக் கொண்டிருக் கிறார்களே என்று நான் அஞ்சுகிறேன். ஓ, அவர்கள் மகிழ்ந்து மிகவும் சந்தோஷப்படும்படி, அது மக்களின் இதயத்தை அசைக்க வேண்டும். 99 இதோ, சற்று நேரம் இந்த வழியைப் பாருங்கள், நேராக இங்கு இந்தத் திசையில், நான் ஒரு சிறிய பெண்மணியைப் பார்க்கிறேன், எனக்கு அவளைத் தெரியாது, ஆனால் அவள் ஜெபித்துக்கொண்டிருக்கிறாள். அவள் ஒரு சிறிய, தட்டையான தொப்பியை அணிந்திருக்கிறாள், அவள் வேதனையிலிருக்கிறாள், அவளுக்கு மேலாக அந்த வெளிச்சம் நிற்கிறது. அவள் அவளது, அவளுடைய கண்கள் மற்றும் காதுகளில் ஏதோ கோளாறால் வேதனைப் படுகிறாள். நான் யாரைக்குறித்துப் பேசுகிறேன் என்பதை அந்தப் பெண்மணி உணர்ந்து கொள்ளவில்லை என்று அஞ்சுகிறேன். தேவனாகிய கர்த்தாவே, அவள் அதைத் தவறவிடாதபடிக்கு ஏதாவது சொல்லும் அல்லது ஏதாவது செய்யும். அவளது பெயர் திருமதி. ஆலன். சரி, நீங்கள் குணமடைவீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் எழுந்து, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் சொஸ்தமடையுங்கள். 100 இப்போது நன்றியுள்ளவர்களாயிருங்கள். [ஒலி நாடாவில் காலியிடம்] அப்படித்தான் அதைச் செய்ய வேண்டும். 101 மீண்டும் இங்கு இந்த மற்ற பகுதியில், ஒரு சிறிய பெண்மணி கையை உயர்த்தியபடி அமர்ந்து, ஜெபித்துக்கொண்டிருக்கிறாள். அவள் ஒரு வேதனையுடன் இருக்கிறாள், அவளுடைய தலையில் ஏதோ கோளாறு இருக்கிறது, அவளுடைய தொண்டையில் ஆஸ்துமா இருக்கிறது, மற்றும் இதய நோயும் இருக்கிறது. நேராக இங்கு அமர்ந்து, நேராக என்னைப் பார்க்கிறாள். அவளது பெயர் திருமதி. ஹென்றி, அவள் சான் டியாகோவிலிருந்து வந்திருக்கிறாள். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்திருக்கிறார். வீட்டிற்குச் சென்று நலமாயிருங்கள், உங்கள் விசுவாசம் உங்களை இரட்சித்தது. 102 "நீ விசுவாசிக்கக்கூடுமானால்!" எனக்கு இந்த மக்களைத் தெரியாது, என் வாழ்நாளில் நான் இவர்களைப் பார்த்ததே இல்லை. இது என்ன, நண்பர்களே? இப்போது, மர்மமான ஏதோ ஒன்று என்று நினைக்கச் செல்லாதீர்கள், இது தேவனுடைய வாக்குத்தத்தம், இயேசு கிறிஸ்து. 103 நான் அந்தச் சுவரை நோக்கிச் செல்லும்போது, ஒரு வெளிச்சத்தின் மூலமாக விழும் எனது நிழல், நிழல் அதிகமாகவும் மேலும் அதிகமாகவும் துல்லியமாகிறது, அது பரிபூரணமான எனக்குள் மறையும் வரை; அதுபோல கர்த்தருடைய வருகை பூமிக்கு வந்துகொண்டிருக்கும்போது, அவருடைய சமுகம் மேலும் மேலும் நெருங்கி வருகிறது, இறுதியாக நாம் அவருக்குள் கலக்கும்வரை, இந்த ஆவியானவர் நம்மைத் தம்முடன் அழைத்துச் செல்வார். 104 "நான் உங்களுக்குள்ளும், நீங்கள் எனக்குள்ளும், நான் பிதாவுக்குள்ளும், பிதா..." மற்றும் இதுபோலவே, "இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்". நீங்கள் விசுவாசத்தைக் கொண்டிருந்து நம்புங்கள். 105 இதோ, அங்குத் தலையசைத்தபடி அமர்ந்திருக்கும் ஒரு சிறிய பெண்மணி, நேராக இங்கு என்னைப் பார்த்தபடி, அங்குச் சுமார் இரண்டாவது வரிசையில், நீங்கள் சைனஸ் பிரச்சனையால் வேதனைப்படுகிறீர்கள். அது சரியானது. நிச்சயமாக உங்களிடம் ஜெப அட்டை இல்லை, அல்லவா? எந்த ஜெப அட்டையும் இல்லை. நீங்கள் அங்கே அமர்ந்து, ஜெபித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தலைவலி இருப்பதையும், உங்கள் தலையை நீங்கள் இப்படித் தேய்ப்பதையும் நான் காண்கிறேன். நீங்கள், "கர்த்தராகிய இயேசுவே, நான் அதை விசுவாசிக்கிறேன்" என்று ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். அது உண்மை யானால், உங்கள் கையை உயர்த்துங்கள். அவள் எதற்காக ஜெபித்துக்கொண்டிருந்தாள் என்று எனக்கு எப்படித் தெரியும்? இனி உங்களுக்கு அது இருக்காது, இயேசு கிறிஸ்து உங்களைக் குணமாக்குகிறார். நீங்கள் பிரதான ஆசாரியரைத் தொட்டீர்கள். 106 நேராக இங்கு எனக்கு முன்பாக, சில வரிசைகளுக்குப் பின்னால், தனது தொண்டை யில் கையை வைத்திருக்கும் ஒரு சிறிய, மெலிந்த தோற்றமுள்ள பெண்மணி அமர்ந்தி ருக்கிறாள், நான் அவளுக்கு ஒரு அந்நியன், ஆனால் மரணம் அவளை நிழலிட்டுள்ளது, அவளுக்குப் புற்றுநோய் இருக்கிறது. அவளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது, அவளது தொண்டை அடைக்கப்பட்டிருக்கிறது, அவளால் சாப்பிடவோ குடிக்கவோ முடியவில்லை, அது கர்த்தர் உரைக்கிறதாவது (THUS SAITH THE LORD). எனக்கு உங்களைத் தெரியாது, ஆனால் நீங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். தேவன் உங்களைக் குணமாக்கினார், என் சகோதரியே, உங்கள் சுகத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் பிரதான ஆசாரியரின் வஸ்திரத்தைத் தொட்டீர்கள். 107 நேராகப் பின்புறத்தில், இங்கு இவ்விடத்தின் பின்புறத்தில், இந்த இருக்கை வரிசையின் மையப்பகுதியில், ஒரு சிறிய... ஒரு பெண்மணி இருக்கிறாள், அவள் உயர் இரத்த அழுத்தத்தால் வேதனைப்படுகிறாள். அவள்-அவள் இங்கிருந்து வந்தவள் அல்ல, அவள் ஒரு ஃபின் (Finn), அவள் பின்லாந்திலிருந்து வந்தவள். சகோதரியே, நீங்கள் விசுவாசித்தால், உங்கள் சுகத்தைப் பெற்றுக்கொள்கிறீர்கள். ஜுமாலன் ரௌஹா (Jumalan rauhaa). உங்கள் கால்களில் எழுந்து நின்று உங்கள் சுகத்தை ஏற்றுக்கொண்டு சொஸ்தமடையுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கிட்டோஸ் (Kiitos), இயேசுவே. 108 அல்லேலூயா! நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? "நீ விசுவாசிக்கக் கூடுமானால்!" 109 அங்கு மூட்டுவலியோடு படுத்திருக்கும் அந்தச் சிறிய பெண்மணியிடம் சொல்லுங்கள்: தேவன்மீது விசுவாசமாயிருங்கள், அந்தக் கட்டிலிலிருந்து எழுந்து வீட்டிற்குச் செல்லுங்கள். 110 அங்கு மேலே பால்கனியில், ஒரு பெண்மணி ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய-அவளுடைய காதில் ஏதோ கோளாறு இருக்கிறது, அது அவளது காதின் பின்புறத்தில் உள்ள காதுநரம்புப் (mastoid) பிரச்சினை. அவள் அறுவை சிகிச்சைக்குத் தயாராக இருக்கிறாள். அது யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு: உங்கள் பெயர் திருமதி. டெலானி (Mrs. Delaney). உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள், திருமதி. டெலானி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். 111 அவள் எதைத் தொட்டாள்? தேவனுடைய மகத்தான பரிசுத்த ஆவியானவரை, நமது அறிக்கையின் பிரதான ஆசாரியரை. அவர் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் கால்களில் எழுந்து நின்று, நீங்கள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவரைப் பெற்றுக்கொள்ளுங்கள். எழுந்து நின்று உங்கள் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசியுங்கள். இப்போது நாம் ஜெபிக்கும் போது, உங்கள் கைகளை உயர்த்துங்கள். 112 ஓ தேவனாகிய கர்த்தாவே, விடிவெள்ளி நட்சத்திரத்தை அனுப்பினவரே, உயிர்த் தெழுதலில் இயேசு கிறிஸ்துவை எங்களுக்கு அளித்தவரே, அவருடைய வல்லமை இப்போது எங்களுடனே இங்கு இருக்கிறது, பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு தேவனுடைய தூதன் ஒருவன் என்னிடம் வந்து இந்த வெளிப்பாட்டை உறுதிப்படுத்தினார் என்று அறிக்கையிட்டு, நான் அவிசுவாசத்தைக் கண்டனம் செய்து, ஜெபத்தின் மூலம் பிசாசின் வல்லமையை முறியடிக்கிறேன். நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நிற்கிறோம். 113 சாத்தானே, நீ தோற்கடிக்கப்பட்டாய், இயேசு கிறிஸ்து கல்வாரியில் தமக்குப் பதிலாக மற்றவர்களுக்காக ஏற்ற பாடுகள் மற்றும் மரணத்தின் மூலம் உன்னைத் தோற்கடித்தார். இந்த மக்கள் குணமடையும்படியாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக இந்த இடத்தை விட்டும் இந்த மக்களை விட்டும் வெளியே வா! 114 எழுந்து, அவரைத் துதியுங்கள், அவரை நோக்கி உங்கள் கைகளை உயர்த்துங்கள். அது முடிந்துவிட்டது, இயேசு மரித்தார், இயேசு உயிர்த்தெழுந்தார். இயேசு இங்கே இருக்கிறார், நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாத வராயிருக்கிறார். நான் உங்களை இயேசு கிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுக்கிறேன், ஆவி யானவர் இங்கே இருக்கிறார், இனி நீங்கள் வியாதியுடனிருக்கவோ, அல்லது இனி பாவியாக இருக்கவோ எந்த அவசியமுமில்லை. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவருடைய நட்சத்திரத்தைக் கவனித்தல் 64